நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார் அந்தி நிறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ புந்தி இலள்என் றணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன் சிந்தை மகிழக் குறமடவாய் தெரிந்தோர் குறிதான் செப்புவையே