நந்திப் பரியார் திருஒற்றி நாதர் அயன்மால் நாடுகினும் சந்திப் பரியார் என்அருமைத் தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே அந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல்சொரியும் சிந்திப் புடையேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே