நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார் நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர் முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே