நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனிநட ராசஎன் சற்குரு மணியே