நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும் வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும் வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால் சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும் செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர் என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே