நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி நின்றானைப் பொன்றாத நிலையி னானை நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம் ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல் என்றானை என்றும்உள இயற்கை யானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே -------------------------------------------------------------------------------- கண்கொளாக் காட்சி எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்