நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும் நல்லவ னேதிருத் தில்லை மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில்வந் தடைந்தால் என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா திருப்பதுன் திருவருட் கியல்போ