நம்பனை அழியா எங்கள் நாதனை நீதனைக் கச்சிக் கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக் கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே