நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல் வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே