நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள் வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில் பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே