நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர் வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும் வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர் புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே புத்தமுதம் உண்டோ ங்கும் புனிதகுலம் பெறவே உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம் உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே