நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே உறைமணக்கும் பூம்பொழில்சூர் ஒற்றிஅப்பா உன்னுடைய மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ