நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோ ம் இந்த நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன் பொற்றாளை விரும்பியது மன்று ளாடும் பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே