நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார் வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல் நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே