நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல் மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே