Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1001
நல்ல நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும்பரி மளந்தரும் முக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே
பாடல் எண் :2482
நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.