நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன் நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண் சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன் வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண் செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே