நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள் ஞானநா டகம்புரி நலமே வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகறிந் ததுநீ இல்லையென் றாலும் விடுவனோ சும்மா இருப்பதுன் திருவருட் கியல்போ
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம் நாத முடிவில் நடிக்கின்ற பாதம் வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம் மந்திர யந்திர தந்திர பாதம் ஆடிய