நல்லவா அளித்த நல்லவா எனையும் நயந்தவா நாயினேன் நவின்ற சொல்லவா எனக்குத் துணையவா ஞான சுகத்தவா சோதிஅம் பலவா அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம் வல்லவா என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே