நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான்செயத் தக்கதே தென்பாள் செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார் விருப்பிலர் என்மிசை என்பாள் வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள் வருந்துவாள் நான்பெற்ற மகளே எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்