நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக் களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன் அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே