நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில் அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச் சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய் பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன் பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே