நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர் அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும் சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம் இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே