நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம் ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக் கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும் தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே திருச்சிற்றம்பலம் ஆனந்தப் பதிகம் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்
நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம் ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா