நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக் கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட் பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே