நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில் நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும் தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப் பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ