நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில் ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன் கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே