நாடுந் தாயினும் நல்லவன் நமது நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண் பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் பண்பென் மட்டும்நின் பால்இலை போலும் தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின் சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே