நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக் கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத் தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே