நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா கோவேஎன் கணவாஎன் குரவாஎன்() குணவா நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும் நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே () எண் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க