நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும் நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம் குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும் பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே