நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள் ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச் சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே