நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப் பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக் காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே