நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும் தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ