நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம் பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே