நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார் வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர் வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம் களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான் ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்