நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப் புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல் பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப் படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும் போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால் புகலவச மாமோநீ புகலாய்என் தோழி