நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும் பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே