நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில் ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே
நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம் ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ