நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித் தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித் தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத் தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில் திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே