நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித் தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந் தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும் தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய் மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே