Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :586
நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையக்தே
பாடல் எண் :2260
நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோ தப்பெற் றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே
பாடல் எண் :4675
நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் 
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன் 
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன் 
தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே
பாடல் எண் :4676
நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர் 
வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன் 
கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில் 
தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே
பாடல் எண் :4705
நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது 
வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து 
தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான் 
அம்பலவன் தன்அருளி னால்   
திருச்சிற்றம்பலம்
டீயஉம



--------------------------------------------------------------------------------


 உலப்பில் இன்பம்

கலிவிருத்தம்
பாடல் எண் :4814
நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே 
வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன் 
ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக் 
கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே
பாடல் எண் :5397
நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் 
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன் 
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன் 
கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.