நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய் நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய் ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க் கறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில் இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே