நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய் வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும் ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி