நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின் காலிடத்தே வாழ்கின்றேன் காண்