நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம் வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர் வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த் தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த் திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே