நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித் தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த நல்லான்தன் தாட்கே நயந்து