நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும் வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன் உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன் பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே