நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய் மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய் பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித் தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்