நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள் நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால் தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே